தேசியக் கொடியை அவமதித்ததாக புகார்: வருத்தம் தெரிவித்த பாலிவுட் நடிகர்

தேசியக் கொடியை அவமதித்ததாக புகார் எழுந்ததை அடுத்து, பாலிவுட் நடிகர் அக்சய் குமார் வருத்தம் தெரிவித்துள்ளார்.

 

 

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி நேற்று இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதின. இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியை கண்டுரசித்த பாலிவுட் நடிகர் அக்சய் குமார், இந்திய தேசியக் கொடியை தலைகீழாக பிடித்து அசைத்தபடி உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.

இதற்கு இந்திய ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை அறிந்த நடிகர் அக்சய் குமார், தேசியக் கொடி மீதான நன்னடத்தை கோட்பாடுகளை மீறியதற்காக மனமார வருந்துவதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

 

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Bollywood actor aksai kumar apology for Disrespect National flag, தேசியக் கொடியை அவமதித்ததாக புகார்: வருத்தம் தெரிவித்த பாலிவுட் நடிகர்
-=-