கொரோனா தடுப்பு: ரூ.25 கோடி நிதி வழங்கிய அக்‌ஷய்குமார்

மும்பை:

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரபல பாலிவுட் நடிகர்  அக்சய்குமார் ரூ. ரூ.25 கோடி நிதி வழங்கி உள்ளார்.

உலக நாடுகளை ஆட்கொண்டுள்ள கொரோனா வைரஸ்  இந்தியாவையும் முழுமைப்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், வைரஸ் பரவலைத் தடுக்க  21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவிகளை மக்கள் வழங்கலாம் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையடுத்து,  பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், கொரோனா வைரஸ் பாதிப்புக்காக பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு 25 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.