சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் திரைக்கு வந்து சூப்பர் ஹிட் ஆன படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கி இருந்தார். பிரபு, ஜோதிகா, நயன்தாரா ஆகியோரும் இதில் நடித்திருந்தனர்.

ரஜினி நடித்த சந்திரமுகி படத்தின் 2ம் பாகம் உருவாகிறது. முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு 2ம்பாகமும் இயக்கு கிறார். இதில் ரஜினிகாந்த நடிக்கவில்லை. ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார். ரஜினியிடம் ஆசி பெற்று விட்டு இப்படத் தில் நடிப்பதாக லாரன்ஸ் தெரிவித்தார். முதல்பாகத்தில் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் வேடத்தை 2ம் பாகத்தில் லாரன்ஸ் ஏற்று நடிக்கிறார்.
இதில் ஜோதிகா, சிம்ரன் நாயாகியாக நடிப்பார்கள் என்று கூறப்பட்டது. அது உறுதியாகவில்லலை. தற்போது பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சுஷாந்த்சிங் ராஜ்புத் நடிப்பில் உருவான கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஹீரோயினாக நடித்தி ருந்தார் கியாரா என்பது குறிப்பிடத் தக்கது. சந்திரமுகி 2 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படம் திகில் படமாக உருவாகிறது.