ராமாயண கதையில் சீதையாக நடிக்கிறார், இந்தி நடிகை கிருதி சனோன்..

 

புராண காவியமான ராமாயணத்தை ‘’ஆதிபுருஷ்’’என்ற பெயரில் ஓம்ராவத் இயக்க உள்ளார். தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் தயாரிக்கப்படுகிறது.

இந்த படத்தில் ராமபிரனாக பிரபாஸ் நடிக்கிறார். சயீப் அலிகான், ராவணன் வேடத்தில் நடிக்கிறார். ஜனவரி மாதம் படத்தை தொடங்கி 2022 ஆண்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

சீதையாக நடிக்க தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் பிரபலமான நடிகைகளை பரிசீலனை செய்து வந்தனர்.

கீர்த்தி சுரேஷ், அனுஷ்கா, தீபிகா படுகோனே உள்ளிட்டோர் பெயர்கள் அடிபட்டன.

இப்போது சீதையாக இந்தி நடிகை கிருதி சனோன் நடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தில் ’’கிராபிக்ஸ்’’ காட்சிகள் பிரதானமாக இருக்கும்.

அவதார், ஸ்டார்வார்ஸ் ஆகிய படங்களில் பணியாற்றிய வி.எஃப்.எக்ஸ் தொழில்நுட்ப கலைஞர்கள், ஆதிபுருஷ் படத்தில் பணி புரிய உள்ளனர்.

– பா. பாரதி