ஆணுறைக்கும் தடையா? கவர்ச்சி நடிகை பூனம்பாண்டே நக்கல் டுவிட்

மும்பை:

ஹாராஸ்டிரா மாநிலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்ய, உற்பத்தி செய்ய, உபயோகப்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே இதுகுறித்து நக்கலாக டுவிட் செய்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பதிவில், பிளாஸ்டிக் தடையில் ஆணுறையும் (காண்டம்) அடங்குமா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

மற்றொரு பதிவில் யார்? யாரெல்லாம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருக்கிறீர்களோ, அவர்கள் சாலையில் சுற்றாதீர்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில்  கடந்த  23ந்தேதி முதல் பிளாஸ்டிக் தடை  அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு வணிகர்களிடையே கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில், கவர்ச்சி நடிகை பூனம் பாண்டேவின் டுவிட் மேலும் சர்ச்சையை எழுப்பி உள்ளது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்ட நிலையில், தற்போது, தான் அதை விளையாட்டாக பதிவிட்டதாகவும், பிளாஸ்டிக் தடையை வரவேற்ப தாகவும்  பூனம் பாண்டே தெரிவித்து உள்ளார்.

இந்த கவர்ச்சி நடிகைதான் ஏற்கனவே உலக கோப்பை கிரிக்கெட்டின் போது, இந்தியா வெற்றி பெற்றால் மைதானத்தில் நிர்வணமாக ஓடுவேன் என கூறி  பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.