வைர வியாபாரி நிரவ் மோடி மீது பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா புகார்!

டில்லி:

ஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11400 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்துவிட்டு, தலைமறைவாக உள்ள பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி மீது பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா புகார் கூறி உள்ளார்.

பிரபர வைர வியாபாரியான நிரவ் மோடியின்,  வைர நகைகளை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தும் வகையில்,  வர்த்தக தூதராக பிரியங்கா சோப்ரா நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், விளம்பர தூதராக இருந்து, விளம்பர படங்களில் நடித்துள்ள தனக்கு, அதற்கான சம்பளம் தனக்கு வழங்கப்படவில்லை என்றும், தன்னை நிரவ் மோடி ஏமாற்றி விட்டார் என்றும் கூறி உள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் அளவுக்க  மோசடி நடைபெற்றுள்ளது குறித்த தகவல் வெளியான நிலையில்,  பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி தலைமறைவானார். அவர் வெளிநாடு தப்பிவிட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே நிரவ் மோடி மீது, முறையான தகவல்களை அளிக்காமல் 280 கோடி ரூபாய் முறைகேடாக கடன் பெற்றதாக சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் அவர்  வெளிநாடு தப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.