டில்லி:

பிரபல பாலிவுட் நடிகை மற்றும் தமிழில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் படத்தில் நடித்தவருமான  ஊர்மிளா இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து, தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார்.

அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில்  வடக்கு மும்பை தொகுதி ஒதுக்கப்படும் என தகவல்கள் பரவி வரும் நிலையில், ஊர்மிளா, தேர்தலில் போட்டியிடுவதற்காக தான் காங்கிரஸ் கட்சியில் சேர வில்லை என்றும்,  தேர்தல் முடிந்ததும் கட்சியில் இருந்து வெளியேற மாட்டேன் என்றும் தெரிவித்து உள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர்  தமிழில் கமல்ஹாசன்  நடித்த இந்தியன் படத்தில் நடித்து மருத்துவக் கல்லூரி மாணவியாக நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து, இயக்குநர்  ராம் கோபால் வர்மா இயக்கத்தில் ரங்கீலா, சத்யா உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் பல மொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர்.

சமீப காலமாக அரசியலுக்கு வரப்போவதாக  பேசி வந்த ஊர்மிளா இன்று ராகுல் முன்னிலை யில்  காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். அவருக்கு  மும்பை வடக்கு மக்களவை தொகுதி வழங்கப்படலாம் என்று தகவல்கள் பரவி வருகின்றன.

நேற்று மும்பை  காங்கிரஸ் முன்னாள் தலைவர் சஞ்சய் நிரூபத்தை நடிகை ஊர்மிளா சந்தித்து பேசிய நிலையில், அவருக்கு தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று தகவல்கள் பரவின. இந்த நிலையில், இன்று அதிகாரப்பூர்வமாக ஊர்மிளா காங்கிரசில் இணைந்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஊர்மிலா, தான் தேர்தலுக்காக அரசியலுக்கு வரவில்லை என்றும், தேர்தல் முடிந்த பிறகும் கட்சியில் தொடருவேன் என்று கூறினார்.