பிரபல பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் மரணம்

மும்பை

பாலிவுட்டின் பிரபல நடன இயக்குநர் சரோஜ்கான் மரணம் அடைந்துள்ளார்.

பாலிவுட்டின் பிரபல நடன இயக்குநரான சரோஜ் கான் கடந்த 40 வருடங்களாக 2000க்கும் அதிகமான படங்களில் பணி புரிந்துள்ளார்.  இவருக்கு தற்போது 71 வயதாகிறது.   மூன்று முறை இவர் சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார்.

இவருக்கு கடந்த 20 ஆம் தேதி அன்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது.  அதையொட்டி மும்பையில் உள்ள குரு நானக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  அங்கு இவருக்கு நடந்த கொரோனா பரிசோதனையில் இவருக்குப் பாதிப்பு ஏற்படவில்லை என்பது உறுதியானது. மருத்துவமனையில் சரோஜ் கானுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கபட்டது.

இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 2.30 மணி அளவில் இவர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.  சரோஜ் கான் மரணம் திரையுலக பிரமுகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.