பாலிவுட் பாடலாசிரியர் திடீர் மரணம்.. இந்தி திரையுலகுக்குசோதனை காலம்..

கொரோனா பாதிப்பால் இந்திய திரையுலகம் முழுவதும் பாதிக் கப்பட்டிருக்கிறது. படங்கள் ரிலீஸ் ஆகாததால் கோடிகளில் பணம் முடங்கியிருக்கிறது. அத்துடன் இந்தி திரையுலகுக்கு மற்றொரு சோதனையும் சேர்ந்துக் கொண்டிருக்கிறது.
பிரபல நடிகர்கள் ரிஷிகபூர், இர்பான் கான், இசை அமைப்பாளர் வாஜித் கான் என அடுத்தடுத்து இறந்தனர். ஆனாலும் அவர்களுக்கு கொரோனா தடையால் யாரும் அஞ்சலி செலுத்தக்கூட நேரில் செல்ல முடியாத பரிதாப நிலை ஏற்பட்டது. இந்நிலையில் மற்றொரு பிரபல பாடலாசிரியரான அன்வர் சாகர் நேற்று இறந்தார்.

 


மும்பையில் வீட்டில் இருந்தவருக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டு பேச்சு மூச்சில்லாமல் கிடந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
70 வயதாகும் அன்வர் 1970, 80 களில் பிரபலமான பல பாடல்கள் எழுதி உள்ளார். அக்‌ஷய்குமார், ஜாக்கி ஷெராப் . டேவிட் தவான் போன்ற பல்வேறு நடிகர்களுக்கு அவர் சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். அவரது மறைவுக்கு இந்தி திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.