சினிமா தயாரிப்பாளர் கொரோனாவால் மரணம்….

சினிமா தயாரிப்பாளர் கொரோனாவால் மரணம்….

ஊரடங்கு காலத்தில் அடுத்தடுத்து இந்தி சினிமா பிரபலங்கள் மரணம் அடைந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் , இந்தி திரைப்பட தயாரிப்பாளர் அனில் சூரி என்பவர் , கொரோனாவுக்கு உயிர் இழந்துள்ளார்..

‘கர்மயோகி’ ’ராஜ்திலக்’ போன்ற இந்தி படங்களை தயாரித்த அனிலுக்கு இரு தினங்களுக்கு முன் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

அவரை உடனடியாக சிகிச்சைக்குக் கொண்டு சென்றனர்.

மும்பையில் உள்ள இரு தனியார் மருத்துவமனைகள் ‘படுக்கைகள் காலி இல்லை’’ எனக்கூறி அவரை தங்கள் மருத்துவமனையில் சேர்க்க மறுத்து விட்டன.

கடைசியாக இன்னொரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் அனில சூரி  மரணம் அடைந்தார். அவருக்கு வயது, 77.

இந்த தகவலைச் செய்தியாளர்களுக்குத் தெரிவித்த ராஜீவ் சூரியும் , ஒரு தயாரிப்பாளர் தான்.

அமிதாப்பச்சன் நடித்த ‘மஞ்சில்’ என்ற படத்தை ராஜீவ் தயாரித்துள்ளார்.

இந்த படத்தை இயக்கிய பாசு சாட்டர்ஜி, வியாழக்கிழமை மறைந்த , நிலையில் தனது  சகோதரர் அனிலும் உயிர் இழந்திருப்பது, ராஜீவ் சூரிக்கு பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.