இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 206ஆக உயர்ந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவில் இதுவரை 5 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதிலிருந்து இதுவரை 13,486 பேரிடம் 14,376 மாதிரிகள் பெறப்பட்டு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாலிவுட்டில் பிரபல பாடகியான கனிகா கபூருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லக்னோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர்.

இவர், ஹோலி பண்டிகையை முன்னிட்டு துபாய், லண்டன் ஆகிய நாடுகளுக்கு சென்றுவிட்டு, கடந்த மார்ச் 15ம் தேதி இந்தியா திரும்பியுள்ளார்.

இவர் கொரோனா தொற்று பரிசோதனை செய்யாமல்,  லண்டன் சென்று வந்ததை மறைத்து நண்பர்களுக்கு ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் பெரிய பார்ட்டி கொடுத்துள்ளார். அந்த பார்ட்டியில் முக்கிய பிரபலங்கள்   சுமார் 100 பிரபலங்கள் வரை கலந்துகொண்டதாக  கூறப்படுகிறது.

தற்போது கனிகா கபூருக்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில், அவருடன் பார்ட்டியில் கலந்துகொண்டவர்கள் பாடு திட்டாட்டமாகி உள்ளது…  அவர்களுக்கும் கனிகாவிடம் இருந்து கொரோனா தொற்று பரவியிருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கோலிவுட்டே கலகலத்துபோயிருக்கிறது….

இதனிடையே தம்முடன் உத்தரப்பிரதேசத்தின் லக்னோ பார்ட்டி ஒன்றில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ராஜஸ்தான் முதல்வருமான வசுந்தரராஜே சிந்தியாவின் மகன் துஷ்யந்தும் கலந்து கொண்டதாகவும் கனிகா கபூர் கூறியுள்ளார். இது  மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.

இதுமட்டுமின்றி  கனிகாகபூர் உடன் உ.பி. மாநில சுகாதாரத்துறை அமைச்சர் உள்பட பலர் பூக்களைக் வாரி வீசி ஹோலி பண்டிகை கொண்டாடிய தகவலும் வெளியாகி உள்ளது..

அது தொடர்பான வீடியோ….

இந்த நிலையில், உ.பி. மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தற்போது கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது..

மேலும், நொய்டா-ஜி.ஆரைச் சேர்ந்த சுமார் 50 உள்ளூர் பத்திரிகையாளர்.  சுகாதார அமைச்சர் ஜே.பி.சிங் பார்ட்டியில்  கலந்து கொண்ட பின்னர், தற்போது  தனிமையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.