நடிகர் அக்‌ஷய் குமார் சம்பளம் ரூ. 135 கோடி…

 

மற்ற இந்தி நடிகர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவர் அக்‌ஷய் குமார்.

அங்குள்ள மெகா ஸ்டார்கள் ஆண்டுக்கு ஒரு படம் நடிப்பதே அபூர்வம்.

ஆனால் அக்‌ஷய் குமார், ஆண்டுக்கு குறைந்தது ஐந்து படங்களையாவது கொடுத்து விடுவார்.

அவரது படங்களின் தயாரிப்பு செலவு 200 கோடி ரூபாய். ஆனால் சுமார் 500 கோடி ரூபாய் வரை வசூலித்து விடும்.

அவரது படங்களுக்கு “மினிமம் கியாரண்டி” உண்டு.

தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என யாரும் அவரது படங்களால் நஷ்டம் அடைந்தது இல்லை இதனால் அவரை போட்டி போட்டு தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்கின்றனர்.

இப்போது அவர் ஒரு படத்துக்கு 115 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார்.

இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டில் நடிக்கும் படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ள அக்‌ஷய் குமார், அந்த படத்துக்கு 135 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார்.

அக்‌ஷய் குமார் கைவசம் இப்போது, சூரியவன்ஷி, அட்ராங்கி ரே, பெல்பாட்டம், பச்சன் பாண்டே, பிரிதிவிராஜ், ராம்சேது, ரக்‌ஷாபந்தன் ஆகிய படங்கள் உள்ளன.

– பா. பாரதி