கண்ணையா குமாருக்கு ஆதரவாக அணி திரளும் பாலிவுட் பிரபலங்கள்..!

பகுசராய்: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கண்ணையா குமாருக்கு ஆதரவாக பரப்புரை செய்ய, பல பாலிவுட் நட்சத்திரங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் போட்டியிடும் பீகாரின் பகுசராய் தொகுதியில், சிபிஐ கட்சியின் சார்பாக, ஜவஹர்லால் நேரு பல்கலையின் முன்னாள் மாணவர் தலைவர் கண்ணையா குமார் போட்டியிடுகிறார்.

அவருக்கு பலதரப்பிலிருந்தும் ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில், பல பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் அவருக்கு ஆதரவாக களமிறங்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஷபானா ஆஸ்மி, ஸ்வர பாஸ்கர், பிரகாஷ் ராஜ், ஜாவேத் அக்தர், இம்தியாஸ் அலி மற்றும் சோனா ஜா ஆகியோர் அந்தப் பட்டியலில் உள்ளனர். இவர்கள் தவிர, பிரபல சமூக செயல்பாட்டாளர் மேதா பட்கர் மற்றும் ஹர்திக் பட்டேல் ஆகியோரும் பிரச்சாரம் செய்யவுள்ளனர்.

– மதுரை மாயாண்டி