ஆக்ரா கண்டோன்மென்ட் ரயில்வே ஸ்டேஷனில் இரட்டை குண்டு வெடிப்பு!

ஆக்ரா:

புகழ்பெற்ற ஆக்ரா ரயில்வே ஸ்டேஷனில்  இரண்டு இடங்களில் பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது.

இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.  சம்பவ இடத்துக்கு உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

வெடித்தது குண்டா அல்லது வேறு ஏதேனும்  பொருட்களா என விசாரணை செய்யப்பட்டு வருகிறது.  . சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது.

ஏற்கனவே தாஜ்மகாலை குண்டு வைத்து தகர்ப்போம் என்று ஐஎஸ் பயங்கரவாதிகள் மிரட்டல் வந்திருந்த நிலையில் இந்த குண்டு வெடிப்பு நடைபெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.