ஜிம்பாப்வே அதிபர் மீது குண்டு வீச்சு….காயமின்றி தப்பினார்

ஹராரே:

ஜிம்பாப்வே அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதனால் அங்கு பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தென்மேற்கு பகுதியில் உள்ள புலாவாயோ நகரில் அதிபர் எம்மர்சன் ம்நான்காவா தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசினார். அங்கு மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.

பேச்சை முடித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கியபோது எம்மர்சன் ம்நான்காவாவை நோக்கி ஒரு வெடிகுண்டு வீசப்பட்டது. இதை கண்ட அவரது பாதுகாவலர்கள் லாவகமாக செயல்பட்டு அதிபரை மயிரிழையில் காப்பாற்றினர். இந்த தாக்குதலில் சிலர் காயம் அடைந்தனர்.