காத்மண்ட்:

நேபாளத்தில்  மோடி தொடங்கி வைக்கவுள்ள மின் திட்ட அலுவலகத்தில் இன்று குண்டு வெடித்தது.

இந்தியாவின் உதவியுடன் கிழக்கு நேபாளப் பகுதியில் ஹைட்ரோ மின்சார திட்டம் 2020ம் ஆண்டில் செயல்படுத்தப்படுகிறது. . 900 மெகாவாட் அருண் 3வது ஹைட்ரோ மின்சார திட்டத்தில் அலுவலகம் காத்மண்டுவில் இருந்து 500 கி.மீ. தொலைவில் உள்ள கண்பாரி தும்லின்நகரில் உள்ளது.

மே 11ம் தேதி இந்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது. இதில் மோடி கலந்துகொள்கிறார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த அலுவலகத்தில் இன்று குண்டு வெடித்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இச்சம்பவத்துக்கு எந்த அமைப்பும் இது வரை பொறுப்பேற்கவில்லை.

ஒரு மாதத்தில் நேபாளத்தில் உள்ள இந்திய சொத்துக்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடப்பது இது 2வது முறையாகும். கடந்த 17ம் தேதி பிரத்நகரில் உள்ள இந்திய தூதரக கள அலுவலகத்தில் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் சுற்று சுவர் சேதமடைந்தது என்பது குறுப்பிடத்தக்கது.