பீகாரில் குண்டு வெடிப்பு: ஒருவர் சாவு

பாட்னா:

பீகாரில் சசாரம் மாவட்ட தலைமை கோர்ட்டின் வெளியே குண்டு வெடித்தது. இடதில் ஒருவர் பலியானார். 3 பேர் காயமடைந்தனர்.

சசகாரம் கோர்ட்டுக்கு வெளியே இருந்த மோட்டார் சைக்கிள் திடீரென வெடித்து சிதறியது. மோட்டார் சைக்கிளின் சைடு பாக்சினுள் இருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியதாக அருகிலுள்ள பொதுமக்கள் கூறினர்.

இந்த வெடி விபத்தில் மோட்டார் சைக்கிள் உரிமையாளரே பலியானார். மற்றும் அருகில் இருந்த போலீஸ்காரர் ஒருவர், பொதுமக்கள் 2 பேர் காயமடைந்தனர். ­மூன்று பேரும் மாவட்ட அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருவதாக  போலீசார் தெரிவித்தனர். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.