கொழும்பு

லங்கை கொழும்பு நகரில் இன்று காலை 3 தேவாலயங்களிலும் இரு சொகுசு ஓட்டலகளிலும் நடந்த குண்டு வெடிப்ப்பில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இன்று கிறித்துவர்களுக்கு முக்கிய பண்டிகயான ஈஸ்டர் கொண்டாடப்படுகிறது. இது வரை விரதம் இருந்த கிறித்துவர்கள் ஏசு உயிர்த்தெழுந்த ஈஸ்டரில் விரதத்தை முடித்து கொண்டாடுவது வழக்கமாகும். இந்நிலையில் கொழும்பு நகரில் ஏராளமானோர் கூடியிருந்த தேவாலயங்கள் மற்றும் சொகுசு ஓட்டல்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

இந்த குண்டு வெடிப்பு கொச்சிக்கடை தேவாலயம், கதுவாபிடியா தேவாலயம், பாட்டிகோலா தேவாலயம் மற்றும் சங்க்ரி லா ஓட்டல், சினமான் கிராண்ட் ஓட்டல் ஆகிய இடங்களில் நிகழ்ந்துள்ளது. இன்று காலை சுமார் 8.45 அளவில் தொடங்கிய இந்த தொடர் குண்டு வெடிப்பில் சுமார் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் இதுவரை சுமர் 280 பேர் காயம் அடைந்துள்ளதாக அரசு தகவல் தெரிவிக்கின்றது.   காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த குண்டு வெடிப்பில் மரணம் அடைந்தவர்களுக்கு இந்தியா தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளது

இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.  இந்த விபத்தில் சிக்கியோர் குறித்த விவரம் அறிய தொலைபேசி எண்கள் தரப்பட்டுள்ளன.  இந்திய தூதரகம் அறிவித்துள்ள +94777903082, +94112422788 மற்றும் +94115422789 ஆகிய எண்காலை தொடர்பு கொள்ளலாம்.