கிர்கிஸ்தானில் பயங்கர குண்டு வெடிப்பு!

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷேக்கில் உள்ள சீன தூதரகத்திற்கு அருகில்  கார் குண்டு வெடித்தது . பலர் இறந்துள்ளார் மற்றும் காயம் ! சீன தூதரகத்தை குறி வைத்து தாக்குதல் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தூதரக வளாகத்தில் உள்ள தலைமை தூதர் வீட்டின் வாசலில் உள்ள கேட்டின்மீது குண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோதி நடத்தப்பட்ட இந்த தீவிரவாத தாக்குதலில் பலர் பலியானதாக ரஷியாவில் உள்ள ’இன்ட்டர்ஃபேக்ஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பலி எண்ணிக்கை தொடர்பான துல்லியமான விபரங்கள் வெளியாகாத நிலையில் இந்த தாக்குதலில் சீனத் தூதரகம் தீக்கோளமாக காட்சியளிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

kirkistan