நேபாளத்தில் இந்திய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு: பரபரப்பு

காத்மாண்டு:

நேபாளம் காத்மண்டுவில் இயங்ககி வரும் இந்திய தூதரக அலுவலகம் அலுவலகம் அருகே குண்டு வெடித்துள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த குண்டுவெடிப்பு காரணமாக எந்தவித சேதமோ, காயமோ ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

நேபாளம் தலைநகர்  காத்மாண்டு பிர்த்நகர் பகுதியில் இந்திய தூதரக அலுவலகம் உள்ளது.  இந்த அலுவலகம் அருகே  சக்தி குறைந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு காரணமாக  பெரிய அளவில் பாதிப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர் வெடி குண்டை வைத்துவிட்டு சென்றதாக நேபாள நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றதும் அந்த பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம்   பிரத்நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.