ஹிலாரி கிளிண்டன் வீட்டில் வெடிகுண்டு : அதிர்ச்சியில் அமெரிக்கா

நியூயார்க்

நியூயார்க் நகரின் புறநகர் பகுதியில் வசித்து வரும் ஹிலாரி கிளிண்டன் வீட்டில் வெடிகுண்டு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் மற்றும் அவர் மனைவி ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் நியூயார்க் நகரின் புறநகர் பகுதியில் வசித்து வருகின்றனர். அந்த இல்லத்தில் அமெரிக்க நேரப்படி இன்று நள்ளிரவு 1 மணிக்கு வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமெரிக்க கோடீஸ்வரரான ஜார்ஜ் சோர்ஸ் வீட்டில் புதன்கிழமை ஒரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வெடிகுண்டும் அதே தோற்றத்தில் இருந்ததாக தெரிய வந்துள்ளது. ஜார்ஜும் இதே பகுதியில் வசிப்பவர் ஆவார்.

இந்த வெடிகுண்டை யாராவது கொண்டு வந்து வைத்தார்களா அல்லது பார்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.  இதற்கு எந்த ஒரு அமைப்பும் இது வரை பொறுப்பேற்கவில்லை..

You may have missed