அமெரிக்கா : பலருக்கு வெடிகுண்டு பார்சல்

நியூயார்க்

மெரிக்காவில் பலருக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பபட்டுள்ளது தீவிரவாத செயலாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

நியூயார்க் நகரின் புறநகர் பகுதியில் வசித்து வரும் கோடீஸ்வரர் ஜார்ஜ் சோர்ஸுக்கு கடந்த திங்கள் அன்று ஒரு வெடிகுண்டு பார்சல் அவர் இல்லத்துக்கு பார்சல் மூலம் அனுப்பப்பட்டிருந்தது. இன்று அதே பகுதியில் வசித்து வரும் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் இல்லத்தில் ஒரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மற்றொரு முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இல்லத்திலும் ஒரு வெடிகுண்டு பார்சல் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல்களால் அமெரிக்கா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்துமே அதிர்ச்சி அடைந்துள்ளன.

இந்த செய்தியை தொடர்ந்து மற்றொரு அதிர்ச்சி செய்தியும் வந்துள்ளது.

முன்னாள் அதிபர்கள் வீடுகளில் வெடிகுண்டு பார்சல் அனுப்பப்பட்டது குறித்து அமெரிக்க செய்தி தொலைக்காட்சி சிஎன்என் செய்தியை லைவாகா ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. அப்போது செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த அந்த தொலைக்காட்சியின் நியூயார்க் நகர ஒளிபரப்பு நிலையத்தில் வெடிகுண்டு போல ஒரு சந்தேகத்துக்குறிய பொருள் கிடத்துள்ளது. அதை ஒட்டி ஒளிபரப்பு நிறுத்தபட்டது.

இவ்வாறு வெடிகுண்டு பார்சல்கள் அமெரிக்காவின் பல இடங்களுக்கு அனுப்பி உள்ளதாக தகவல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இதில் தீவிரவாதிகள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் இதற்கு பொறுப்பு ஏற்கவில்லை.