நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை

சென்னை சாலிகிராமம் பகுதியில் உள்ள பிரபல நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபட்டுள்ளது.

தமிழகத்தின் பிரபல நடிகர்களில் ஒருவரான விஜய் வீடு சென்னை சாலிகிராமத்தில் உள்ளது.

அவருடைய படங்கள் வெளிவரும் போது எல்லாம் ஏதாவது சர்ச்சை கிளம்பி வருகிறது.

இந்நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது

தற்போது விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைப்பேசி மூலம் இந்த மிரட்டல் விடுக்கபடுள்ளது.

விஜய் வீட்டில் உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

வெடிகுண்டு ஏதும் கிடைக்காததால் இந்த மிரட்டல் வெறும் புரளி எனத் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் மரக்காணத்தை சேர்ந்த புவனேஸ்வர் என்பவரிடம் விசாரணை நடந்து  வருகிறது.