அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விட்டவர் யார் தெரியுமா? ஷாக் தகவல்..

--

ல நடிகர் அஜீத்குமார் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு இல்லாததால் வீட்டில் இருக்கிறார். அஜீத்துக்கு சென் னையில் ஈஞ்சம்பாக்கம் மற்றும் திருவான் மியூர் பகுதியில் இரண்டு பங்களா உள்ளது. தற்போது ஈஞ்சம் பாக்கம் வீட்டில் தங்கி இருக்கிறார்.


இந்நிலையில் நேற்று மாலை அஜீத் ஈஞ்சம்பாக்கம் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும் அது வெடிக்கும் என்று போலீஸ் கட்டுப்பட்டு அறைக்கு மர்ம ஆசாமி போன் செய்து உடனே இணைப்பை துண்டித்துவிட்டார். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், போலீஸார் ,மோப்ப நாயுடன் அஜீத் விட்டுக்கு சென்று சோதனை செய்தனர். இரண்டு வீடுகளிலும் நடத்திய சோதனை யில் அது வெறும் புரளிஎன்பது தெரிய வந்தது. ஈஞ்சம்பாக்கம்வீட்டில் அஜீத் குடும்பத்தினருடன் தங்கி இருந்தார்.
வெடிகுண்டு மிரட்டல் விட்டவர் யார் என்பதை செல்போன் எண்ணை வைத்து போலீசார் கண்டுபிடித்தனர். மரக்கா ணத்தை சேர்ந்த புவனேஸ்வரன் என்பவர் மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. போலீசார் அவரிடம் விசாரித்தபோது நடிகர் விஜய் விட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விட்டு கைதானவர் என்பது தெரிந்தது.