சென்னை கடற்கரை அருகே உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை:

மைலாப்பூர் அருகே கடற்கரை சாலையில் அமைந்துள்ள டிஜிபி அலுவலகத்தில் வெடி குண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

சென்னை கடற்கரை சாலையில் கலங்கரை விளக்கம் எதிரே  அருகே தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் (டிஜிபி) அலுவலகம் உள்ளது. 24 மணி நேரமும் பாதுகாப்பு வளையத்திற் குள் இருக்கும் காவல்துறை அலுவலகத்துக்குள் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் தொலைபேசியில் காவல்துறை  கட்டுபபாட்டு அலுவலகத்துக்கு பேசிவிட்டு உடனே தொடர்பை துண்டித்துவிட்டார்.

இதனையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு  டிஜிபி அலுவலகம் முழுவதும்  சோதனை செய்யப்பட்டு வருகிறது.  இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

மேலும், மிரட்டல் விடுத்த நபர் பேசிய தொடர்பு எண்ணை வைத்து, அந்த நபரை அடையாளம் காணும் முயற்சியிலும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இது புரளியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.