தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: கோட்டையில் பரபரப்பு

சென்னை:

மிழக அரசின் தலைமை செயலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் மிரட்டல் விடுத்து எழுதப்பட்ட  கடிதம்  வந்ததை  தொடர்ந்து கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து தலைமை செயலகம் வளாகம் முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பரபரப்பு நிலவியது. இறுதியில் வெடிகுண்டு கடிதம் புரளி என தெரிய வந்தது.

வெடிகுண்டு தொடர்பாக வந்த கடிதத்தில் அனுப்புனர்  பெயர் ஏதும் இல்லாத நிலையில், அந்த மொட்டை கடிதம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.