நடிகர் அஜித்தின் வீட்டிலும், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறை கட்டுப்பாடு அறைக்கு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது.

இதனையடுத்து மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்களுடன் அஜித்தின் வீடும், மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் சோதனை செய்யப்பட்டது. வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அது பொய்யான மிரட்டல் என்பது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து தொலைபேசி எண்ணை வைத்து மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கண்டுபிடித்தனர்.

அவர் மரக்காணத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர். தினேஷ் மனநிலை சரியில்லாதவர். ஏற்கனவே இதே போல் ரஜினிகாந்தின் வீட்டிற்கும், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது அவரது வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

[youtube-feed feed=1]