விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்….!

நடிகர் விஜய்யின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் அது சிறிது நேரத்தில் வெடித்து சிதறும் எனவும் கடந்த சனிக்கிழமை அன்று சென்னையில் இருக்கும் காவல்துறையின் மாநில கட்டுப்பாட்டு அறைக்கு ஒருவர் போன் செய்து பேசியுள்ளார்.

இதையடுத்து நீலாங்கரை, சாலிகிராமத்தில் இருக்கும் விஜய் வீடு மற்றும் சாலிகிராமத்தில் உள்ள அவரது திருமண மண்டபம் ஆகிய 3 இடங்களிலும் சோதனையில் செய்தனர் . அதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

இந்நிலையில் மிரட்டல் விடுத்த வாலிபரின் செல்போன் எண்ணை வைத்து அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதில் அந்த நபர் போரூர் ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் என்றும், அஜித் ரசிகராகிய அவர் போதையில் ‘பிகில்’ படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பதாக போலீஸ்விசாரணையில் கூறியுள்ளார் .

 

கார்ட்டூன் கேலரி