விப்ரோவுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பெங்களூரு:

பெங்களூருவில் உள்ள விப்ரோ நிறுவன அலுவலகத்துக்கு இ மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் பிரபல ஐடி நிறுவனம் விப்ரோ செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு மர்ம இ மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அதில் ‘‘ரூ. 500 கோடி கொடுக்க வேண்டும். இல்லையென்றால் விப்ரோ நிறுவனம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும்’’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து விப்ரோ நிறுவனம் சார்பில் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து இ மெயிலில் மிரட்டல் விடுத்த மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.