நடிகர் சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் மிரட்டல்….!

‘சூரரைப்போற்று’ திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்து அதற்கான வேலைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டு அது விவாதம் ஆனது .

இந்நிலையில் ஆழ்வார்பேட்டை சீதாம்மாள் காலனி 2வது தெருவில் இயங்கி வந்த நடிகர் சூர்யாவின் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் இன்று மதியம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் கால் செய்து மிரட்டல் விடுத்துள்ளார்.

உடனே மோப்பநாயுடன் போலீசார் அங்கு விரைந்து சென்றனர் . ஆய்வு மேற்கொண்ட போது அந்த இடத்தில் இயங்கி வந்த அலுவலகத்தை சூர்யா கடந்த 6 மாதத்திற்கு முன்பாகவே அடையாறுக்கு மாற்றி விட்டார் என தெரியவந்தது. மேலும் வெடிகுண்டு மிரட்டல் போலியானது எனவும் தெரியவந்தது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.