மும்பை: மும்பை சித்திவிநாயகர் கோயில் அறக்கட்டளையிடமிருந்து ரூ. 10 கோடி கொரோனா நிவாரண நிதி பெற்ற மகாராஷ்டிரா அரசுக்கு இடைக்கால தடை விதிக்க மும்பை ஐகோர்ட் மறுத்துவிட்டது.

மும்பையில் பிரசித்தி பெற்றது சித்தி விநாயகர் கோயில் அறக்கட்டளை அமைப்பாகும். இந்த அமைப்பானது மகாராஷ்டிரா அரசுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ. 10 கோடியை வழங்கி உள்ளது.

மேலும் அரசின் பல திட்டங்களுக்கு 2 கட்டங்களாக நிதி வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நிதி வழங்கியதற்கு இடைக்கால தடை விதிக்க கோரியும், மும்பை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

அதை விசாரித்த நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும் பதில் மனு தாக்கல் செய்ய மகாராஷ்டிரா அரசுக்கும், கோயில் நிர்வாகத்திற்கும் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.