பாரிக்கரின் உடல்நிலை: வாக்குமூலத்தை தாக்கல் செய்ய கோவா அரசின் தலைமைச் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

பனாஜி:

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடல்நலக்குறைவு குறித்து தெளிவுபடுத்தும் மனு மீதான விசாரணையை மூன்றாவது முறையாக பாம்பே உயர் நீதிமன்றத்தின் பனாஜி பெஞ்ச் இன்று ஒத்திவைத்து.

பாரிக்கரின் உடல்நிலை குறித்த அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கோவா அரசின் தலைமைச் செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இன்று பனாஜியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த மனுதாரர் டிராஜனோ டி’மெல்லோவின் வழக்கறிஞர் ரோஹித் பிரஸ் டி சா, கூறுகையில், டிசம்பர் 7-ம் தேதி பதில் அளிக்கும்படி உயர் நீதிமன்றம் மாநில வழக்கறிஞர் ஜெனரலுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்த வழக்கு வரும் 11-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

மனோகர் பாரிக்கர், கனைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அமெரிக்காவுக்கு இரண்டு முறை சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். அதேபோன்று, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் பாரிக்கர் சிகிச்சை பெற்றார். அதற்குப் பிறகு வீடு திரும்பிய அவர், அங்கிருந்தபடியே அலுவலகப் பணிகளை கவனித்து வருகிறார்.

இதற்கிடையே, பாரிக்கர் உடல் நலமின்றி இருப்பதால், அரசு நிர்வாகம் முடங்கியிருப்பதாகக் கூறிய எதிர்க்கட்சிகள், அவர் பதவி விலக வேண்டும் என போராட்டம் நடத்த தொடங்கின.

இந்நிலையில் கோவா முன்னணி கட்சியைச் சேர்ந்த டிரஜனோ டி’மெல்லோ என்பவர், மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். பாரிக்கரின் உடல்நிலை குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என அவர் தனது மனுவில் வலியுறுத்தியிருந்தார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Goa CM Manohar Parrikar, பாரிக்கரின் உடல்நிலை: வாக்குமூலத்தை தாக்கல் செய்ய கோவா அரசின் தலைமைச் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
-=-