மும்பை: அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் மனு மீதான உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அவரின் சிறைவாசம் தொடர்கிறது.

2019ம் ஆண்டு மகாராஷ்டிராவை சேர்ந்த கட்டட வடிவமைப்பாளரை தற்கொலைக்கு தூண்டியதாக அர்னாப் கோஸ்வாமி மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்த வழக்கு தற்போது மகாராஷ்டிர அரசின் உத்தரவின் பேரில், சிபிஐ மீண்டும் வழக்கின் விசாரணையை தொடங்கியுள்ளது.

இந்த வழக்கில் மும்பை போலீசார் அர்னாப் கோஸ்வாமியை கடந்த புதன்கிழமை கைது செய்துள்ளனர். வழக்கில் அவரை காவலில் எடுக்க விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் போலீசார் கோரினர்.

இதையடுத்து, அர்னாப் கோஸ்வாமி நவம்பர் 18 வரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க அலிபாக் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே நேரத்தில் மும்பை உயர்நீதிமன்றத்தில் அர்னாப் தரப்பில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று 2வது நாளாக விசாரணைக்கு வந்தது.

இரு தரப்பு வாதங்களுக்கு பின்னர், ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இதையடுத்து, அர்னாப்பின் சிறைவாசம் நாளையும் தொடர்கிறது.