சோனியா குறித்து அவதூறு: அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக பதியப்பட்ட 2 எஃப்ஐஆர் கேன்சல்…

--
மும்பை:
சோனியா குறித்து அவதூறாக பேசியதாக பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக முப்பையில் பதிவு செய்யப்பட்ட 2 எஃப்ஐஆர்-ஐ நீதிமன்றம் ரத்து செய்தது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத்தலைவர் சோனியா காந்தி குறித்து ரிபப்ளிக் டிவி நெறியாளர் அர்னாப் கோஸ்வாமி கூறிய கருத்துக்கள் காங்கிரஸ் தொண்டர்களை கொதிப்படைய செய்தது. இதையடுத்து மகாராஷ்டிரா உள்பட பல்வேறு மாநிலங்களில் அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மும்பையில் அவர்மீது பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதை எதிர்த்து, அர்னாப் கோஸ்வாமி,  செய்த மனு மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  அப்போது கோஸ்வாமிக்கு எதிரான புகார்கள், கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என அவரது வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே வாதிட்டார்.
வழக்கறில்  மகாராஷ்டிர அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,. “பத்திரிகையாளருக்கு கருத்து சுதந்திரம் உள்ளது. ஆனால் ஒருவர் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான் அடித்துக் கொல்லப்பட்டார் என்று கூற உரிமையில்லை” என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து,  ஆனால் இந்த குற்றச்சாட்டில் போதுமான முகாந்திரம் இல்லை எனக்கூறி, மும்பை உயர்நீதிமன்றம் இரண்டு  எஃப்.ஐ.ஆர்களையும் நீக்கியுள்ளது.
மகாராஷ்டிராவின் மும்பை மற்றும் நாக்பூர் காவல் நிலையத்தில் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த புகார் ரத்து செய்யப்பட்டுள்ளது.