அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமீன் வழங்க மும்பை உயர் நீதிமன்றம் மறுப்பு…!

மும்பை: அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கட்டட வடிவமைப்பாளர் தற்கொலை வழக்கில் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர்  அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டு உள்ளார். நீதிமன்றக் காவலில் செல்போன் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழ, அவர் தலோஜா சிறைக்கு மாற்றப்பட்டார்.

அர்னாப் கைது செய்யப்பட்டு 6 நாள்கள் ஆகிவிட்டது. அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. மேலும், அலிபாக் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்யுமாறும், 4 நாள்களுக்குள் மனு மீது முடிவெடுக்குமாறும் மும்பை நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.