முகரம் ஊர்வலத்தில் சிறுவர்களுக்கு காயம் ஏற்படக் கூடாது!! போலீசாருக்கு நிதிமன்றம் உத்தரவு

மும்பை:

முகரம் ஊர்வலத்தில் சிறுவர்களுக்கு காயம் ஏற்படுத்திக் கொள்ளாமல் இருப்பதை போலீசார் உறுதிப்படுத்த வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிகா சமுதாயத்தின் முகரம் பண்டிகை ஊர்வலத்தின் போது அவர்களுக்கு காயம் ஏற்படுத்தப்படுகிறதா என்பதை மும்பை தெற்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் உறுதிப்படுத்த வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகள் சவந் மற்றும் ஜாதவ் தலைமையிலான அமர்வு பைசல் பனர்சவாலா என்பவர் தாக்கல் செய்த பொது நல வழக்கை விசாரித்தனர். ஆண்டுதோறும் அக்டோபர் 1ம் தேதி நடக்கும் இந்த முகரம் பண்டிகை ஊர்வலத்தில் கத்தி மற்றும் கூர்மையான ஆயுதங்கள் மூலம் உடலின் பின் பகுதி, தலைகளில் காயம் ஏற்படுத்தப்படுகிறது. இதில் சிறுவர்கள் கலந்துகொள்ள தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத தலைவர்கள் முடிவு செய்ய வேண்டும் என்று முந்தைய அமர்வுகளில் நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நடைமுறை ஆயிரத்து 300 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று சிகா தரப்பில் ஆஜரான வக்கீல்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மத தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை வழங்கியது. அதோடு இத்தகைய ஊர்வலத்தை போலீசார் கண்காணித்து வீடியோவில் பதிவு செய்ய வேண் டும் என்று கடந்த டிசம்பரில் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஊர்வலத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்ப டுவதில்லை என்பதை போலீசார் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.

நீதிபதி சவாந் கூறுகையில், ‘‘ குழந்தைகளின் பாதுகாப்பு என்பது தீவிர பிரச்னை. தென் மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் பிரவீன் பத்வால், சிகா சமுதாயத்தை சேர்ந்த ஊர்வல அமைப்பாளர்களிடம் பே ச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

இதில் குழந்தைகள் கையில் ஆயுதங்கள் வழங்குதல், காயம் ஏற்படுத்துதல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது தொடர்பாக பதில் அறிக்கையை காவல் துறை தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தார்.