வெடிகுண்டு மிரட்டல் – லண்டன் ரயில் நிலையத்தில் முதியவர் கைது

லண்டன்: சாரிங் கிராஸ் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாரிங் கிராஸ் ரயில் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றி செல்லும் வாகனம் ஒன்று நீண்ட நேரமாக மூடியப்படி இருந்தது. திறக்கப்படாமல் இருந்த வாகனத்தில் வெடிகுண்டு இருப்பதாக எழுந்த புரளியை அடுத்து பயணிகள் அச்சமடைந்தனர். தகலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு சென்று பரிசோதித்ததில் வெடிகுண்டு ஏதும் இல்லை என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து புரளியை கிளப்பி விட்ட 38 வயதான ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
london
இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் கூறுகையில்” வெள்ளிக்கிழமை காலை 6.35 மணிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக ஒருவர் தெரிவித்தார். அங்கு சென்று சோதனையிட்டதில் அப்படி ஏதும் இல்லை. வெடிகுண்டு மிரட்டல் வந்ததை கொண்டு விசாரித்ததில் முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக தென்படுகிறார். இதனால் யாருக்கும் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை. தீவிர சோதனைக்கு பிறகு ரயில் நிலையம் மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்