எஸ்.ஜே.சூர்யாவின் ‘பொம்மை’ ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டார் தனுஷ்…!

SJ சூர்யா நடிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை,இறவாக்காலம் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.

இதனை தவிர உயர்ந்த மனிதன் படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது மொழி,பயணம்,காற்றின் மொழி உள்ளிட்ட படங்களை இயக்கிய ராதாமோகன் இயக்கும் ‘பொம்மை’ படத்தில் SJ சூர்யா ஹீரோவாக நடிக்கவுள்ளார்

இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடித்து வருகிறார். காதல் கலந்த த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவாளராகவும், யுவன் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர். காதலர் தினத்துக்கு திரைக்கு வரவுள்ளது.

விரைவில் இசை வெளியீடு நடைபெறவுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இதனை தனுஷ் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.