செங்கல்சூளையில் பணிசெய்து வந்த 11 கொத்தடிமைகள் மீட்பு! காஞ்சிபுரம் கோட்டாட்சியர் அதிரடி

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் அருகே தனியாருக்கு சொந்தமான செங்கல்சூளையில் கொத்தடிமை களாக பணியாற்றி வந்த  11 பேரை காஞ்சிபுரம் கோட்டாட்சியர் அதிரடி நடவடிக்கையின் மூலம் மீட்டுள்ளார்.

காஞ்சிரம் மாவட்டத்தில், செங்கல்பட்டு அருகே உள்ள பாலூர் கோணாஞ்சேரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை உள்ளது. இங்கு, செங்க லுக்கு தேவையான மண் மற்றும் கல் அறுத்தல் போன்ற பணிகளில் பலர் ஈடுபட்டு வந்தனர். இவர்களில் சிலர் பல மாதங்களாக கொத்தடிமைகளாக இருந்து வருவ தாக காஞ்சிபுரம் கோட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கோட்டாட்சியர் முத்துவடிவேல் காவல்துறையினருடன் திடீரென சம்பந்தப்பட்ட செங்கல்சூளைக்கு சென்று அதிரடி விசாரணை நடத்தினார். அப் போது அங்கு பணி செய்து வந்த 3 குழந்தைகள் உள்பட 11 பேர் கொத்தடிமை சிக்கி  இருப்பது தெரியவந்தது.

அவர்களை மீட்ட கோட்டாட்சியர், அவரிகளிடம் விசாரணை நடத்திய போது, அவர்கள் அனைவரும் திண்டிவனத்தை அடுத்த நல்லாம்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், ரூ. 2 லட்சம் முன் பணமாகப் பெற்றுக் கொண்டு கடந்த 6 மாதங்களுக்கு  செங்கல் சூளையில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து செங்கல்சூளை நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மீட்கப்பட்டவர்களுக்கு  அரசு சார்பில் உதவித் தொகை மற்றும் அரிசி ஆகியவை வழங்கப்பட்டு அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

You may have missed