ஸ்ரீதேவி மரணம் : நடந்தது என்ன? : போனி கபூர் வாய் திறந்தார்

.

மும்பை

டந்த மாதம் 24ஆம் தேதி அன்று ஸ்ரீதேவி மரணம் அடைந்த அன்று நடந்தது என்ன என்பதை போனி கபூர் தனது நண்பரிடம் கூறி உள்ளார்.

உறவினர் ஒருவர் திருமணத்துக்கு துபாய் சென்ற ஸ்ரீதேவி அங்கு மரணம் அடைந்தது ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியையும் மிகுந்த துயரத்தையும் உண்டாக்கியது.   இவர் சுயநினைவின்றி குளியல் தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கி இறந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது.    அவர் திடீரென மரணம் அடைந்தது குறித்து பல ஊகங்களும் வதந்திகளும் பரவி வருகின்றன.   ஸ்ரீதேவி மரணம் அடையும் போது அவருடன் இருந்தது அவர் கணவர் போனி கபூர் மட்டுமே.

ஸ்ரீதேவி மரணம் அடைந்த தினத்தில் என்ன நடந்தது என்பதை போனி கபூர் தனது நண்பர் கோமல் நகாதாவிடம் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.   தானும் தனது மகள் ஜான்வியும் ஸ்ரீதேவிக்கு ஒரு ஆச்சரியத்தை அளிக்க திட்டமிட்டு போனி கபூர் துபாய் சென்றுள்ள போது ஸ்ரீதேவி ஓட்டல் அறையில் மரணம் அடைந்ததாக கூறி உள்ளார்.  போனி கபூர் தன்னிடம் கூறியதை கோமல் நகாதா தனது பிளாக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது.

“சுமார் 24 வருடங்களுக்கு முன்பு தாயை இழந்த ஸ்ரீதேவிக்கு திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறி போனி கபூர் ஆச்சரியம் அளித்தார்.  அதற்குப் பிறகு அவர்கள் காதல் வாழ்க்கை நன்கு தொடர்ந்தது.    அடிக்கடி பரிசுகள் அளித்து தன் காதல் மனைவி ஸ்ரீதேவியை போனி கபூர் ஆச்சரியத்தில் ஆழ்த்துவது வழக்கம்.   உறவினர் திருமணத்துக்காக துபாய் சென்ற ஸ்ரீதேவி திருமணக் கொண்டாட்டத்தினால் மிகவும் களைப்படந்துள்ளதாகக் கூறி துபாயில் மேலும் சில தினங்கள் தங்கி ஓய்வெடுக்க விரும்பி உள்ளார்.

       குடும்பத்துடன் ஸ்ரீதேவி

போனி கபூருக்கு அவசர வேலைகள் இருந்ததால் அவர் தனது மகள் குஷியுடன் மும்பை திரும்பினார்.  ஸ்ரீதேவி தனது மகள் ஜான்விக்கு தேவையான சில பொருட்களை ஷாப்பிங் செய்ய 21ஆம் தேதி அன்று கிளம்பினார்.  அந்த பொருட்களின் பட்டியலை தனது மொபைலில் பதிந்துள்ளார்.   ஆனால் அவர் மொபைலை ஓட்டல் அறையில் மறந்து போய் வைத்து விட்டதால் அவரால் எதையும் வாங்க முடியவில்லை.

அதன் பிறகு தனது ஓட்டல் அறையில் முழுவதும் ஓய்வில் இருந்த ஸ்ரீதேவி வெளியில் எங்கும் செல்லவில்லை.  அதன் பிறகு 22ஆம் தேதி அவரைக் காண அவர் நண்பர் வந்துள்ளார்.   அப்போதும் ஸ்ரீதேவி வெளியில் செல்லாமல் நண்பருடன் தனது ஓட்டல் அறையிலேயே தங்கி உள்ளார்.    மிகவும் களைப்பாக இருந்ததால் தனது மும்பை டிக்கட்டை வேறு தேதிக்கு மாற்றுமாறு கணவரிடம் கூறி உள்ளார்.

கடந்த 24ஆம் தேதி அன்று போனி கபூருடன் ஸ்ரீதேவி தொலைபேசியில் பேசி உள்ளார்.  அப்போது அவர், “நான் உங்களை மிகவும் மிஸ் பண்ணுகிறேன்.   பார்க்க வேண்டும் போல உள்ளது”  எனக் கூறி  உள்ளார்.   அதனால் போனி கபூரும் ஜான்வியும் ஸ்ரீதேவிக்கு ஆச்சரியத்தை அளிக்க திட்டமிட்டுள்ளனர்.   அதன்படி ஸ்ரீதேவிக்கு சொல்லாமல் போனி கபூர் துபாய் சென்றுள்ளார்.   மேலும் ஸ்ரீதேவி இதுவரை தனியாக இருந்ததில்லை என்பதால் அவர் மிகவும் பயந்து போய் இருப்பார் என ஜான்வி தன்னை அனுப்பி வைத்ததாகவும் போனி கபூர் கூறி உள்ளார்.

கணவரைக் கண்ட ஸ்ரீதேவி மிகவும் மகிழ்ந்து அவரைக் கட்டிபிடித்து முத்தங்கள் தந்து கொண்டாடி உள்ளார்.   போனி கபூர் தங்கள் இருவரின் விமான டிக்கட்டுகளை 25ஆம் தேதி அன்று மாற்ற எண்ணி இருந்தார்.  அதற்கு ஸ்ரீதேவியும் சம்மதம் தெரிவித்துள்ளார்.  இருவரும் வெளியே சென்று இரவு உணவு அருந்த திட்டமிட்டுள்ளனர்.    முகம் கழுவி வருவதாக ஸ்ரீதேவி குளியல் அறைக்கு சென்றுள்ளார்.

தொலைக்காட்சியை  பார்த்துக் கொண்டிருந்த போனி கபூர் அவர் 15-20 நிமிடமாகியும் வராததால்  போனி கபூர் ஸ்ரீதேவிக்கு குரல் கொடுத்துள்ளார்.  அன்று சனிக்கிழமை இரவு என்பதால் உணவு விடுதிகளில் கூட்டம் அதிக இருகும் என்பதற்காக அவர் குளியல் அறைக் கதவைத் தட்டி உள்ளார்.    அப்போதும் பதில் வராததால் ஓட்டல் ஊழியர்கள் உதவியுடன் உள்ளே சென்ற போது ஸ்ரீதேவி குளியல் தொட்டி தன்ணீரில் மூழ்கியபடி இறந்திருந்தார்.  அதைக் கண்டதும் பயந்து போன போனி கபூர் உடனடியாக ஸ்ரீதேவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.  பிறகு நடந்தது அனைவரும் அறிந்ததே”  என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.