சென்னை- விசாகப்பட்டினம் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு துவக்கம்

சென்னை:

சென்னை சென்ட்ரலில் இருந்து விசாகப்பட்டினம், லக்னோவுக்கு இயக்கப்பட உள்ள சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று (ஜனவரி 6ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து விசாகப்பட்டினம், லக்னோ ஆகிய இடங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும், இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை துவங்கும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பின்படி, இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு துவங்கியுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 02007/08 என்ற நம்பர் கொண்ட வண்டி, சென்னை சென்ட்ரலில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு வரும் 15ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.

இந்த அதிவிரைவு வண்டி, வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் விசாகப்பட்டினத்தில் இருந்து மாலை 7 மணி 5 நிமிடங்களுக்கு கிளம்பி, மறுநாள் மாலை 7 மணி 40 நிமிடங்களுக்கு சென்னை வந்தடையும்.

இதேபோல் சென்னையில் இருந்து லக்னோ இயக்கப்படும் அதிவிரைவு ரயில் ஜனவரி 12, 16, 19, 23, 26 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.