இயக்குனர் லக்ஷ்மன் இயக்கத்தில், நடிகர் ஜெயம் ரவி தனது 25வது படத்தில் நடித்து வருகிறார். சுஜாதா விஜயகுமார் இந்த படத்தை தயாரித்து வருகிறார். இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடித்து வருகிறார்.

மேலும் இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இந்தப் படத்திற்கு ‘பூமி’ என தலைப்பிடப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். இப்படம் விவசாயம் பற்றிய திரைக்கதை என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது முறையாக லக்‌ஷ்மண்- ஜெயம் ரவி இணைந்துள்ள இப்படத்திற்கு டட்லி ஒளிப்பதிவு செய்கிறார் .