ஐஸ்வர்யா ராஜேஷின் 25-வது படம் ; ‘பூமிகா’ டைட்டில் லுக் வெளியீடு….!

இது வேதாளம் சொல்லும் கதை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார் ரதீந்திரன் ஆர்.பிரசாத். இந்த படம் வெளியாகும் முன்பே தனது அடுத்த படத்துக்குத் தயாரானார் ரதீந்திரன்.

முழுக்க மலைப் பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்தப் படத்துக்கு ‘பூமிகா’ எனத் தலைப்பிடப்பட்டு, படத்தின் டைட்டில் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இதனை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.

https://twitter.com/Siva_Kartikeyan/status/1297043359983259648

கார்த்திக் சுப்புராஜ் ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

ராபர்ட் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைக்கிறார். படத்தொகுப்பளாராக ஆனந்த் பணிபுரிகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் 25-வது படமாக ‘பூமிகா’ உருவாகியுள்ளது.