பூமி பிரச்சினை தீர்க்கும் பூமிநாத சுவாமி

பூமி பிரச்சினை தீர்க்கும் பூமிநாத சுவாமி

நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும் பூமிநாத சுவாமி கோவில்

வாஸ்து சம்பந்தமாக அனைத்து தோஷங்களையும் நிவர்த்தி செய்யக் கூடியவராக இத்தல இறைவன் பூமிநாத சுவாமி விளங்குகிறார். தோஷம் விலக சில வரைமுறைகள் இங்குக் கடைப்பிடிக்கப்படுகின்றன.

வாஸ்து தோஷங்களை நீக்கும் சக்திவாய்ந்தவராக, மண்ணச்சநல்லூரில் உள்ள பூமிநாதர் கோவிலில் அருளும் பூமிநாத சுவாமி இருக்கிறார். வாஸ்து சம்பந்தமாக அனைத்து தோஷங்களையும் நிவர்த்தி செய்யக் கூடியவராக இத்தல இறைவன் பூமிநாத சுவாமி விளங்குகிறார். தோஷம் விலக சில வரைமுறைகள் இங்குக் கடைப்பிடிக்கப்படுகின்றன.

வீடுகட்ட விரும்புவோர், தன் வீட்டில் உள்ள வாஸ்து தோஷம் நீங்க வேண்டும் என நினைப்பவர்கள், வீட்டின் அல்லது மனையின் வடகிழக்கு மூலையில் மூன்று பிடி மண் எடுத்து, அதை மஞ்சள் துணியில் கட்டி ஆலயம் கொண்டு வருகின்றனர். அந்த மண் அர்ச்சனை தட்டில் பூ, பழங்கள், மாலையுடன் வைத்து, இறைவனுக்கு அர்ச்சிக்கப்படுகிறது.

அர்ச்சனை முடிந்தபின் ஆலயத்தை வலம் வர வேண்டும். முதல் சுற்றின்போது, மண்ணில் ஒரு பிடியை ஆலய தல விருட்சமான வில்வ மரத்தடியில் போட வேண்டும். இரண்டாம் சுற்றின்போது, மற்றொரு பிடி மண்ணை வன்னி மரத்தடியில் போடுகிறார்கள். அப்போது மகா ருத்ர யாகம் செய்த சாம்பலில் ஒரு பிடி எடுத்து தங்கள் கையில் இருக்கும் துணி முடிப்பில், எஞ்சிய ஒரு பிடி மண்ணோடு சேர்த்து வைத்துக் கொள்கின்றனர்.

மூன்றாவது முறை ஆலயத்தை வலம் வந்து நவக்கிரக நாயகர்களை வழிபடுகிறார்கள். வீட்டிற்கு வந்ததும், மண்ணோடு கலந்த சாம்பலை வீட்டின் பூஜை அறையில் வைத்து விடுகிறார்கள். 5 நாட்களுக்குப் பின்னர், அதில் பாதியை எடுத்து மண் எடுக்கப்பட்ட இடத்தில் போட வேண்டுமாம். அப்படிச் செய்தால் மூன்று மாதங்களுக்குள் நினைத்தது நடக்கும் என்கிறார்கள்.

திருச்சியிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மண்ணச்சநல்லூரில் சாலை அருகில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Boominatha swamy, Details !, Land problems, Patrikaidotcom, tamil news, நில பிரச்சினைகள், பூமிநாத சுவாமி, விவரங்கள்
-=-