​வாக்காளர்களுக்கு இன்று முதல் பூத்-சிலிப்

booth_slip

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, 234 தொகுதிகளிலும் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு இன்று முதல் பூத் சிலிப் அளிக்கப்படுகிறது.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி,  வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு பூத்-சிலிப் களை இன்று முதல் வழங்குகிறார்கள்.  “பூத்-சிலிப்’களைப் பெற்றுக் கொள்ளும் வாக்காளர்கள், தங்களது ஒப்புதலை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

அந்தந்த பகுதி வாக்குச்சாவடியைச் சேர்ந்த தேர்தல் அலுவலர் கால அட்டவணை தயாரித்து “பூத்-சிலிப்’களை வழங்குவார்கள் என்றும், இது குறித்து அந்த அரசியல் கட்சிகளில் அந்தந்த பகுதி முகவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பூத்-சிலிப் கிடைக்கவில்லை என்றால்  தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அல்லது மண்டல அலுவலர்களுக்கு புகார் அளிக்கலாம் என்றும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

You may have missed