டெல்லி: சீனாவுடனான எல்லை பிரச்னை தீரவில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார்.

நாடாளுமன்ற லோக் சபா கூட்டம் இன்று தொடங்கியது. அவையில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீனாவுடனான எல்லை பிரச்சினை தொடர்பாக விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: லடாக் எல்லை பிரச்னை இன்னமும் தீரவில்லை. எல்லை வரையறையை சீனா ஏற்க மறுக்கிறது.  எல்லையில்  அமைதியை நிலைநாட்டவும், இரு நாடுகளின் உறவுகளை வலுப்படுத்த வேண்டியதும் அவசியம். இதை இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

ஆனால், வரலாற்று உடன்படிக்கையை சீனா மதிக்கவில்லை. ஒரு தலைப்பட்சமாக நிலைமையை மாற்றும் சீனாவின் முயற்சிகள் இருதரப்பு ஒப்பந்தங்களை மீறுவதாக உள்ளதாக தெரிவித்துள்ளோம். இந்த விவகாரத்தில் பொறுமை அவசியம் என்று பேசினார்.