லப்புழா

ந்திய – வங்க எல்லையில் கடத்தல்காரர்களிடம் ரூ. 45 லட்சம் லஞ்சம் வாங்கிய எல்லைப் பாதுகாப்பு படை கமாண்டரை சிபிஐ கைது செய்தது.

ஜிபு டி மாத்யூ என்பவர் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையின் 83வது பாட்டாலியன் படைப்பிரிவின் கமாண்டர் ஆக பணி புரிந்து வருகிறார்.  அவர் தனது சொந்த ஊரான கேரளாவில் உள்ள ஆலப்புழாவுக்கு ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்து இறங்கி உள்ளார். அவர் இறங்கியதும் அவரை சிபிஐ அதிகாரிகள் 7 பேர் சுற்றி வளைத்துள்ளனர். அதிகாரிகள் அவர் கொண்டுவந்த பையைத் திறக்கச் சொல்லிக்  கேட்டபோது மறுத்துள்ளார்,

சிபிஐ அதிகாரிகள் அவரை அப்பகுதியில் உள்ள சிபிஐ விசாரணை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணையை தொடங்கினர். கமாண்டர் வைத்திருந்த பையில் ரூ. 45 லட்சம் இருந்தது சோதனையில் தெரியவந்துள்ளது, அந்தப் பணத்தை பறிமுதல் செய்த சிபிஐ அதிகாரிகள் ஜிபு டி மாத்யூவை கைது செய்தனர்.

அதையொட்டி ”இந்தியா – வங்காளதேசம் எல்லையில் கமாண்டர் ஜிபு ட் மாத்யு கடத்தல்காரர்களிடம் இருந்து லஞ்சத்தில் ‘ஒரு பகுதியாக’ ரூ. 45 லட்சம் வாங்கி உள்ளார்.    அதையொட்டி லஞ்சம் வாங்கிய குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளார் என ஏஎன்ஐ செய்தி வெளியிட்டு உள்ளது.

இது தொடர்பாக முழுமையான தகவல்கள் உடனடியாக தெரியவரவில்லை.   ஆனாலும் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் எல்லைப் பாதுகாப்பு படையின் கமாண்டர் கடத்தல்காரர்களிடம் இருந்து லஞ்சம் வாங்கினார் என்ற தகவல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை அளித்து உள்ளது.