லண்டன்

பழைய டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் பிரிட்டிஷ் நீதிமன்றத்தால் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டார்.

ஜெர்மனியை சேர்ந்த டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர்.  இவருக்கு வயது 49.  தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.  இவர் டிவியில் வர்ணனையாளராகவும் பணி புரிந்தவர்.  சமீபத்தில் நோவோக் கின் கோச்சாக இருந்தார்.  ஆறுமுறை கிராண்ட் ச்லாம் சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்றவர்,

இவர் தனியார் வங்கியில் 2015ல் வாங்கிய கடனை இன்னும் செலுத்தவில்லை.  இதனால் வங்கி வழக்கு தொடர்ந்தது. போரிஸ் வழக்கறிஞர் ஜான், தனது வாதத்தில் தனது வாடிக்கையாளரால் நிச்சயம் கடனை திருப்பி செலுத்த முடியும் எனவும் அதற்கு காலக்கெடு தேவை எனவும் தெரிவித்தார்.  ஆனால் வங்கியின் தரப்பில் அவருக்கு ஏற்கனவே பலமுறை கெடு அளித்தும் அவரால் பணத்தை செலுத்த முடியவில்லை என்பதால் அவரை திவால் ஆனதாக அறிவிக்க வேண்டும் என கோரப்பட்டது.

கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் போரிஸ் பெக்கர் திவால் ஆனதாக அறிவித்தது.  இது நிச்சயம் போரிஸின் இமேஜுக்கு களங்கம் ஏற்படுத்தும் எனவும்,  ஆனால் அதை முன்னரே அவர் சிந்தித்து இருக்க வேண்டும் எனவும் அவர் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்