லண்டன்: ஜி 7 உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடிக்கு பிரிட்டன் அழைப்பு விடுத்துள்ளது.

ஜி 7 உச்சி மாநாடு வரும் ஜூன் 11ம் தேதி முதல் 14 வரை நடைபெறுகிறது.  மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரிய நாடுகளிலிருந்தும் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாநாட்டில் கொரோனாவை தோற்கடித்தது, பருவநிலை மற்றும் தொழில் நுட்ப மாற்றங்கள் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகளின் பலன்களை அனைத்து பகுதி மக்களுக்கும் சென்று சேருவதை உறுதி செய்வது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

ஜி7 மாநாட்டுக்கு முன்பு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வரலாம் என்று பிரிட்டன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.