லண்டன்: இந்திய வருகை தர உள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்,  கொரோனா 2வது அலை தீவிரமடைந்துள்ளதால், இந்திய பயணத்திட்டத்தில் மாற்றம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான யான நட்புறவை வலுப்படுத்தும் விதமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஜனவரி 26ந்தேதி இந்திய குடியரசு தினத்துக்கு  இந்தியா வருகை தருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்போது, இங்கிலாந்தில் தொற்று பரவல் தீவிரமாக இருந்ததால், அவரது இந்திய சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து, மூன்று நாள் பயணமாக ஏப்ரல் 26ம் தேதி இந்தியா வர திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்துள்ளதால், அவரது வருகை கேள்விக்குறியானது. இந்த நிலையில் போரிஸ் ஜான்சன்  இந்தியாவில் தங்கியிருக்கும் நேரத்தை குறைத்துக் கொள்ள  முடிவு செய்துள்ளதாகவும், பயணத் திட்டத்தில் சிறு மாற்றம் செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும்,  அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளது.

போரிஸ் ஜான்சன்   இந்திய வருகையின்போது, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பருவநிலை மாற்றம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை இருக்கும் என்று கூறப்படுகிறது.